ஈரான் போரில் அமெரிக்காவுக்கு உதவும் உக்ரைன்: ஜெலென்ஸ்கி கொடுத்த வாக்குறுதி

1 Min Read

ஈரான் உடனான மோதலில் அமெரிக்காவுக்கு உக்ரைன் உதவும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கு உதவும் உக்ரைன்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர், இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலில், ஈரான் தயாரிப்பு ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரைன் அமெரிக்காவுக்கு உதவும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு உதவும் உக்ரைன்: ஜெலென்ஸ்கி கொடுத்த வாக்குறுதி | Ukraine Assist Unites States To Counter Iran

இது தொடர்பாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள உத்தரவில், வாஷிங்டனில் இருந்து வந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையை ஏற்று, ஈரானிய டிரோன்களை எதிர்கொள்ள உக்ரைனில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும், அதற்கான நிபுணர் குழுவையும் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போரில் ரஷ்யா ஈரானிய ட்ரோன் வடிவமைப்பான ஷாஹெட் வகை ட்ரோன் தாக்குதல்களை பல ஆண்டுகளாக எதிர் சண்டை போட்டு வரும் நிலையில், இந்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு அமெரிக்காவுக்கு உக்ரைன் உதவ முன்வந்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட கருத்தில், எங்கள் பாதுகாப்பு மற்றும் உக்ரைனிய மக்களின் பாதுகாப்பிற்கு உதவி நட்பு நாடுகளுக்கு உக்ரைன் எப்போதும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை ரஷ்யாவுடனான போர் நடவடிக்கையில், நட்பு நாடுகளிடம் இருந்து உதவியை மட்டுமே பெற்று வந்த உக்ரைன் தற்போது தனது அனுபவத்தையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி நட்பு நாடுகளுக்கு உதவ முன்வந்துள்ளது சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பில் புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *