ஈரான் இதுவரை எந்த உதவியும் கேட்கவில்லை: ரஷ்யா அறிவிப்பு

1 Min Read

ஈரான் இதுவரை எந்தவொரு உதவியும் தங்களிடம் கேட்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதல்

ஈரான் மீது கடந்த 6 நாட்களாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா, இஸ்ரேலின் இந்த கூட்டுத் தாக்குதலில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈரான் இதுவரை எந்த உதவியும் கேட்கவில்லை: ரஷ்யா அறிவிப்பு | Iran Has Not Requested Any Help Russia Says

அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஈரானும் தங்களது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மட்டுமின்றி  முக்கிய வளைகுடா நாடான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், தற்போது அந்த நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஈரான் உதவி கேட்கவில்லை

இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக தற்போது வரை ஈரான் எந்தவொரு ராணுவ உதவியையும் எங்களிடம் கேட்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஈரான் இதுவரை எந்த உதவியும் கேட்கவில்லை: ரஷ்யா அறிவிப்பு | Iran Has Not Requested Any Help Russia Says

ரஷ்ய தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த விவகாரத்தில் ஈரான் தங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதல்களால் ரஷ்யாவின் பெட்ரோல் விலை பாதிப்பு இல்லை, பாதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்து இருந்தாலும், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் குறித்து எந்தவொரு கருத்தையும் ரஷ்யா முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *