ஈரான் அமெரிக்கப்போர்… வெல்லப்போவது யார்? முன்பே கணித்த சீனப்பேராசிரியர்

1 Min Read

சீனாவைச் சேர்ந்த வரலாற்றாளர் ஒருவர், ஈரான் அமெரிக்கப் போர் குறித்து 2024ஆம் ஆண்டே கணித்துள்ளதால் இணையத்தில் கவனம் ஈர்த்துவருகிறார்.

ஈரான் போரை முன்கூட்டியே கணித்த நபர்

சீனாவைச் சேர்ந்த வரலாற்றாளரான பேராசிரியர் Jiang Xueqin, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்படும் என 2024ஆம் ஆண்டே கணித்துள்ளார்.

வரலாறு மற்றும் தத்துவவியல் கற்பிக்கும் ஆசிரியரான Jiang, 2024ஆம் ஆண்டு மே மாதம் ஆற்றிய விரிவுரை ஒன்றில், டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்றும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

போரில் வெல்லப்போவது யார்? அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில், அமெரிக்கா தோல்வியடையும் என கணித்துள்ளார் Jiang.

ஈரான் அமெரிக்கப்போர்... வெல்லப்போவது யார்? முன்பே கணித்த சீனப்பேராசிரியர் | China Professor Predict Who Win Iran Us Israel War

ஆக, அவர் கணித்ததுபோலவே ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ளார், போரும் வெடித்துள்ளது.

எனவே, அவரது அடுத்த கணிப்பு, அதாவது, போரில் வெல்லப்போவது யார் என்னும் கணிப்பு பலிக்குமா என்பதை அறிய இணையம் ஆவலுடன் காத்திருக்கிறது.

இதற்கிடையில், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாவார் என்றும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் என்றும் Jiang கணித்தது மிகச்சரியாக நிறைவேறியதால், அவரை சீன நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கத் துவங்கியுள்ளது இணையம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *