ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய உலகளாவிய வரி விதிப்புக்கு எதிராக சுமார் இரண்டு டசின் மாகாணங்கள் நீதிமன்றங்களை நாடியுள்ளன.
வர்த்தக பற்றாக்குறை
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட கடுமையான தோல்விக்குப் பிறகு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

உலகின் பெரும்பகுதி நாடுகள் மீது 15 சதவீத வரி விதிக்க திட்டமிட்டதன் மூலம் ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுவதாக வழக்கில் உள்ள ஜனநாயகக் கட்சியின் அட்டர்னி ஜெனரல் மற்றும் ஆளுநர்கள் வாதிடுகின்றனர்.
இதுவரை பயன்படுத்தப்படாத பிரிவு 122 இன் கீழ், ஜனாதிபதி 15% வரை வரிகளை விதிக்க அனுமதிக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தால் அவை நீட்டிக்கப்படாவிட்டால், அவை ஐந்து மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இந்த நிலையிலேயே தற்போது ஓரிகான், அரிசோனா, கலிபோர்னியா மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த அட்டர்னி ஜெனரல்களால் இந்த வழக்கு நடத்தப்படுகிறது.




