செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.., ஒரு நாளைக்கு ரூ. 33 செலுத்தினால் ரூ. 5 லட்சம் பெறலாம்

1 Min Read

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பெரிய கனவு.

குறிப்பாக மகள்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக பலர் முன்கூட்டியே சேமிக்க நினைப்பார்கள்.

இதற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய முக்கியமான திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.., ஒரு நாளைக்கு ரூ. 33 செலுத்தினால் ரூ. 5 லட்சம் பெறலாம் | Sukanya Samriddhi Yojana Savings Scheme Details

2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இந்த கணக்கைத் தொடங்கலாம்.

இந்த திட்டத்தில் பெற்றோர் தங்கள் மகளின் பெயரில் கணக்கைத் திறந்து சிறு தொகையாக பணம் சேமிக்கலாம்.

21 ஆண்டுகள் முடிவில் பெரிய தொகையாக பணம் கிடைக்கும். வங்கி நிலையான வைப்பை விட இந்த திட்டத்தில் வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.

 

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.., ஒரு நாளைக்கு ரூ. 33 செலுத்தினால் ரூ. 5 லட்சம் பெறலாம் | Sukanya Samriddhi Yojana Savings Scheme Details

தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றி அறிவிக்கலாம்.

உதாரணமாக, மாதம் ரூ.1,000 சேமித்தால் ஆண்டுக்கு ரூ.12,000 ஆகும். 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.1.80 லட்சம் ஆகும். வட்டி சேர்த்து 21 ஆண்டுகள் முடிவில் சுமார் ரூ.5.54 லட்சம் வரை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் வட்டி தொடர்ந்து சேரும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.., ஒரு நாளைக்கு ரூ. 33 செலுத்தினால் ரூ. 5 லட்சம் பெறலாம் | Sukanya Samriddhi Yojana Savings Scheme Details

ஆனால் கணக்கு முழுமையாக முதிர்வு அடைவது மகளுக்கு 21 வயது ஆனபோது தான். மகளுக்கு 18 வயது ஆன பிறகு சேமித்த தொகையில் 50% வரை பெற்றோர் எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு மகள்களின் பெயரில் இந்த கணக்கைத் தொடங்கலாம்.

குறிப்பாக, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 மற்றும் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *