இலங்கை கடற்கரைக்கு அருகில் இரண்டாவது ஈரானிய போர்க்கப்பல் வந்துள்ளது.
இந்த கப்பலும் அமெரிக்காவால் தாக்கப்படலாம் என்பதால பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கு முன், புதன்கிழமையன்று, ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழகி கப்பல் எந்த முன்னறிவிப்புமின்றி தாக்குதல் நடத்தியதில், கப்பல் மூழ்கியது.
அதிலிருந்த 130 கடற்படை வீரர்களில் குறைந்தது 87 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மற்றோரு ஈரானிய போர்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இருப்பதாக இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில், 100-க்கும் மேற்பட்ட கடற்படையினர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கை அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஈரானிய கப்பல் துறைமுக அனுமதி கோரியுள்ளதாகவும், அதற்கான முடிவை அரசு விரைவில் அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இவை அனைத்தும், இந்திய பெருங்கடலில் போர் பரவுவதை காட்டுகிறது.
இலங்கை மற்றும் இந்தியா நடுநிலையாக இருந்து உரையாடலை வலியுறுத்திவருகின்றன. ஆனால், இந்த போர் தெற்காசியாவையும் பாதிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
காலி நகரத்தில், தாக்குதலில் உயிரிழந்த 87 ஈரான் கடற்படையினரின் உடல்கள் ஒப்படைக்கத் தயாராக உள்ளனர். மேலும், 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 60 பேர் காணாமல் போயுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானை தாக்கி வரும் நிலையில், ஈரான் மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.




