போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க துபாயில் இலவச இடம் – இந்திய நடிகரின் உதவி

1 Min Read

போர் காரணமாக தங்க இடமில்லாதவர்களுக்கு துபாயில் இலவச தங்குமிடம் வழங்குவதாக இந்திய நடிகர் ஒருவர் அறிவித்துள்ளார்.

ஈரான் போர்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க துபாயில் இலவச இடம் - இந்திய நடிகரின் உதவி | Sonu Sood Offer Free Shelter In Dubai Amid War

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் முழுவதையும் தாக்கி வருகிறது.

ஈரான் – இஸ்ரேல் போர் மத்திய கிழக்கு முழுவதும் விரிவடைந்துள்ளதால், பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவையை ரத்து செய்துள்ளது.

இதனால், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மத்திய கிழக்கிற்கு வந்த பயணிகள் தங்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

சோனு சூட் உதவி

இந்நிலையில், போர் காரணமாக துபாயில் தங்க இடமின்றி தவிப்பவர்களுக்கு இலவசமாக தங்க இடம் ஏற்பாடு செய்வதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

போரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க துபாயில் இலவச இடம் - இந்திய நடிகரின் உதவி | Sonu Sood Offer Free Shelter In Dubai Amid War

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போர் பல பயணிகளை துபாயில் சிக்கித் தவிக்க வைத்துள்ளது. நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ தங்குவதற்கு இடமின்றி தவித்தால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்குகிறோம்.

எந்த தேசியமும் இல்லை. எந்த நிபந்தனைகளும் இல்லை. மனிதாபிமானம் மட்டுமே. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் Instagram இல் @dugastaproperties எங்களுக்கு DM செய்யவும்” என தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். பல்வேறு, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் எண்ணற்ற உதவிகள் செய்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *