அதிகமாக கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு.., எது தெரியுமா?

1 Min Read

உலக பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்காற்றுகிறது.

தொழில், போக்குவரத்து, மின்உற்பத்தி மற்றும் இரசாயனத் துறைகள் அனைத்தும் எண்ணெயை சார்ந்துள்ளன.

அதனால் அதிக எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகள் பொருளாதாரமும் அரசியலும் வலுவாக இருக்கின்றன.

இந்நிலையில், உலகில் அதிக எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகள் எது என்பது குறித்து பார்க்கலாம்.

 

அதிகமாக கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு.., எது தெரியுமா? | Which Countries With Largest Crude Oil Reserves

வெனிசுலா உலகில் அதிக கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடாக கருதப்படுகிறது. சுமார் 303.22 பில்லியன் பீப்பாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா சுமார் 267 பில்லியன் பீப்பாய்கள் இருப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக எண்ணெய் ஏற்றுமதியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல், ஈரான் சுமார் 157–158 பில்லியன் பீப்பாய்கள் இருப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கனடா சுமார் 170 பில்லியன் பீப்பாய்கள் இருப்புடன் முன்னணி நாடாக உள்ளது.

அதிகமாக கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு.., எது தெரியுமா? | Which Countries With Largest Crude Oil Reserves

ஈராக் சுமார் 145.02 பில்லியன் பீப்பாய்கள் இருப்புடன் வளைகுடா பிராந்தியத்தில் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுமார் 113 பில்லியன் பீப்பாய்கள் இருப்பைக் கொண்டுள்ளது. மேலும், குவைத் சுமார் 100 பில்லியன் பீப்பாய்கள் இருப்பு கொண்டுள்ளது.

ரஷ்யா சுமார் 80 பில்லியன் பீப்பாய்கள் நிரூபிக்கப்பட்ட இருப்பு கொண்டுள்ளது. உலகின் பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக உள்ளது.

 

அதிகமாக கச்சா எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடு.., எது தெரியுமா? | Which Countries With Largest Crude Oil Reserves

அமெரிக்கா சுமார் 35–50 பில்லியன் பீப்பாய்கள் இருப்புடன், உற்பத்தி திறனில் உலகில் முன்னிலை வகிக்கிறது.

லிபியா சுமார் 48.36 பில்லியன் பீப்பாய்கள் இருப்பைக் கொண்டுள்ளது. ஆனால் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக உற்பத்தி சீராக இல்லை.

இந்தியாவில் சுமார் 4.5 பில்லியன் பீப்பாய்கள் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *