போருக்கு நடுவில் துபாயில் சிக்கிக்கொண்ட பிரித்தானியப் பெண்ணின் திகில் அனுபவம்

1 Min Read

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், மற்றும் அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் பலர் தங்கள் திகில் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

துபாயில் சிக்கிய பிரித்தானியப் பெண்ணின் திகில் அனுபவம்

லண்டனைச் சேர்ந்த Ourania Righelato (32), துபாய்க்கு தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.

போருக்கு நடுவில் துபாயில் சிக்கிக்கொண்ட பிரித்தானியப் பெண்ணின் திகில் அனுபவம் | Uk Women Scary Experience Struk In Middle East War

 

போருக்கு நடுவே, ஏவுகணைகள் பறக்க, பாதுகாப்புக்காக, பயன்பாட்டில் இல்லாத இரவு விடுதி ஒன்றின் அடித்தளத்தில் தானும் தனது குடும்பமும் தங்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் Ourania.

பின்னர், துபாயிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் ஏறி, நேற்று மதியம் 1.00 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்துள்ளது Ourania குடும்பம்.

தாங்கள் அந்த இரவு விடுதியின் அடித்தளத்தில் தங்கியிருக்கும்போது, சைரன் ஒலி கேட்டு பயந்த தனது மூன்று வயது மகளான Annabel அது குறித்து கேள்வி எழுப்ப, அவள் பயந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியதால், அவளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தான் திகைத்ததாகவும், இப்போதும் அவள் அது குறித்தே பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் Ourania.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *