ரயில் நடைமேடைகளில் உள்ள மஞ்சள் கோடுகளுக்கான அர்த்தம் என்ன தெரியுமா?

1 Min Read

பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பெரிய பங்கு உள்ளது.

குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.

அந்தவகையில், ரயில் நிலையங்களுக்கு செல்லும் போது நடைமேடையில் மஞ்சள் கோடுகளை அனைவரும் கவனித்திருப்போம்.

ரயில் நிலையங்களில் உள்ள மஞ்சள் கோடுகள் அலங்காரத்திற்காக அல்ல, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட முக்கிய குறியீடுகள் ஆகும்.

ரயில் நடைமேடைகளில் உள்ள மஞ்சள் கோடுகளுக்கான அர்த்தம் என்ன தெரியுமா? | Do You Know Why Yellow Lines On Railway Platforms

1960களில் ஜப்பான் நாட்டில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இந்த தொடு கோடுகள் முதன்முதலில் அமைக்கப்பட்டன.

காலால் தொடுவதன் மூலம் அவர்கள் தங்கள் வழியை அறிய இந்த கோடுகள் வடிவமைக்கப்பட்டன. பின்னர் இந்த நடைமுறை உலகம் முழுவதும் பரவியது.

தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் இது கட்டாய பாதுகாப்பு முறையாக உள்ளது.

நடைமேடையின் விளிம்பில் உள்ள மஞ்சள் கோடு பாதுகாப்பு எச்சரிக்கை கோடாக செயல்படுகிறது.

ரயில் வரும்போது அல்லது செல்லும்போது பயணிகள் அந்த கோட்டுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

ரயில் நடைமேடைகளில் உள்ள மஞ்சள் கோடுகளுக்கான அர்த்தம் என்ன தெரியுமா? | Do You Know Why Yellow Lines On Railway Platforms

கூட்ட நெரிசல் மற்றும் அவசர நிலைகளில் விபத்துகளைத் தடுக்க இது உதவுகிறது.

மேலும், உயர்த்தப்பட்ட தொடு கோடுகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டியாக இருக்கின்றன.

அவை வெளியேறும் வாயில், டிக்கெட் கவுன்டர், படிக்கட்டு மற்றும் லிஃப்ட் பகுதிகளுக்கான திசையையும் காட்டுகின்றதனால் அவர்கள் பிறரின் உதவியின்றி பாதுகாப்பாகச் செல்ல முடிகிறது.

மேலும், மஞ்சள் நிறம் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரியும். அதனால் பயணிகளுக்கு இது எளிதில் கவனத்திற்கு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *