முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை! சாதித்த சமரி அதப்பத்து

1 Min Read

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்று இலங்கை மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் 119 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கிரேனடாவில் நடந்தது.

Getty Images முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ஓட்டங்கள் எடுத்தது. சினேல்லே ஹென்றி 15 பந்துகளில் 32 ஓட்டங்களும், தீந்திரா டோட்டின் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா தலா 2 விக்கெட்டுகளும், கவிஷா தில்ஹாரி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

முதல் முறையாக

பின்னர் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹாசினி பெரேரா ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களும், இமேஷா துலானி 34 (25) ஓட்டங்களும், சமரி அதப்பத்து 32 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.

அரைசதம் அடித்த ஹாசினி ஆட்டநாயகி விருதும், சமரி அதப்பத்து தொடர் நாயகி விருதும் வென்றனர்.

Sri Lanka Women 2026

சமரி அதப்பத்து முதல் முறையாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *