ஜெருசலேமில் வீழ்ந்து வெடித்த Cluster Missiles; வெளியேறும் யூதர்கள் – நேரடி காட்சிகள்

1 Min Read

ஜெருசலேமில் Cluster Missiles வீழ்ந்து வெடித்த பகுதிகள் மற்றும் அந்த வீட்டின் உரிமையாளரிடம் நமது செய்தியாளர் உரையாடும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஜெருசலேமில் வீழ்ந்து வெடித்த Cluster Missiles

ஈரான் அமெரிக்கா இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், ஈரானில் 700க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரான் வீசிய Cluster Missiles ஒன்று, இஸ்ரேலின் ஜெருசலேம் பகுதியில் விழுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளாதாக கூறப்படுகிறது.

Cluster Missile தாக்குதலில் சேதமடைந்த பகுதிகள் மற்றும் சேதமடைந்த வீட்டின் உரிமையாளரான யூதர் ஒருவரிடம் நமது செய்தியாளர் உரையாடும் நேரடி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *