23 வயது பெண் ஒருவர் தொடங்கிய நிறுவனம் ஒரே ஆண்டிற்குள் 100 மில்லியன் டொலர் மதிப்பீட்டை எட்டியுள்ளது.
ஒரே ஆண்டில் 100 மில்லியன் டொலர் மதிப்பீடு
இந்தியாவில், பயிற்சி பெற்ற வீட்டுப் பணியாளர்களுடன் பயனர்களை இணைக்கும் ப்ரொண்டோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் எபிக் கேபிடல் தலைமையிலான ஒரு புதிய சுற்றில் 25 மில்லியன் டொலர் திரட்டியுள்ளது.

இந்த நிறுவனம், தொடங்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள் 100 மில்லியன் டொலர் மதிப்பீட்டை எட்டியுள்ளது.
ப்ரொண்டோ(Pronto) என்பது, பயிற்சி பெற்ற வீட்டுப் பணியாளர்களுடன் பயனர்களை இணைக்கும் ஒரு தளமாகும்.

இந்த செயலியின் மூலம், துடைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சமையலறை மற்றும் குளியலறை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் மற்றும் பிற வீட்டு வேலைகளுக்கு பணியாளர்களை கோரி பயனர்கள் முன்பதிவு செய்யலாம்.
இந்த செயலி, டெல்லி NCR, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், சென்னை மற்றும் பிற நகரங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.
அஞ்சலி சர்தானா
23 வயதான அஞ்சலி சர்தானா(Anjali Sardana), கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாக கொண்டு ப்ரொண்டோ(Pronto) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அஞ்சலி சர்தானா, கடந்த 2024 ஆம் ஆண்டிலே ஜார்ஜ்டவுன் பலக்லைக்கழகத்தில் உயிரியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.
அப்போது நாளொன்றுக்கு சுமார் 170 முன்பதிவுகள் வந்தது. இப்போது ஒரு நாளைக்கு 18,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளோம்.
3,000 க்கும் மேற்பட்ட அர்ப்பணிப்புள்ள மற்றும் மகிழ்ச்சியான நிபுணர்கள் தளத்தில் உள்ளனர். கடந்த 3 மாதத்தில் 300 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.




