ஈரான் போருக்கு மத்தியில், மத்திய கிழக்கில் சில விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்கள் காரணமாக, மத்தய கிழக்கு பகுதியில் விமான பயணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய வளைகுடா விமான நிலையங்கள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தை தலமாக கொண்ட Emirates, Etihad, FlyDubai போன்ற விமான நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.
எமிரேட்ஸ் நிறுவனம், முன்பதிவு செய்யப்பட பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து சில விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
அதேசமயம், பயணிகள் விமான நிறுவங்களின் நேரடி அறிவிப்பை பெறாமல் நேரடியாக விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருந்து Etihad Airways குறைந்தது 15 விமானங்களை மூன்று மணிநேரத்தில் இயக்கி சிக்கித் தவிக்கும் பயணிகளை வெளியேற்ற உதவியுள்ளது. இருப்பினும் பெரும்பாலான சேவைகள் மார்ச் 3-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளன.
FlyDubai நிறுவனமும் சில மாலை விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில், நிலைமை இன்னும் மோசமாக மாறலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




