ஈரான் கொடியை அணிந்தபடி அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – தமிழ் பெண் உயிரிழப்பு

1 Min Read

ஈரான் கொடியை அணிந்தபடி அமெரிக்காவில் ஒரு நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், தமிழ் பெண் ஒருவர் உயிரிந்துள்ளர்.

டெக்ஸாஸ் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

ஈரான் கொடியை அணிந்தபடி அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - தமிழ் பெண் உயிரிழப்பு | Tamil Women Savitha Shan Dies In Texas Shooting

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தாக்குதல்தாரியையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

தமிழ் பெண் உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மூவரில் ஒருவர், 21 வயதான சவிதா ஷான்(Savitha Shan) என்ற இந்திய வம்சாவளி தமிழ் பெண் ஆவார்.

ஈரான் கொடியை அணிந்தபடி அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - தமிழ் பெண் உயிரிழப்பு | Tamil Women Savitha Shan Dies In Texas Shooting

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில், பொருளாதாரம் மற்றும் வணிக மேலாண்மை என இரட்டை இளங்கலை பட்டத்தை இந்த ஆண்டு முடிக்க இருந்தார்.

மேலும் Sunflakestickers என்ற ஸ்டிக்கர் விற்கும் இணைய கடையை நடத்தி வந்தார்.

பல்கலைக்கழக ஆவணப்படி, அவரது குடும்பப்பெயர் சண்முகசுந்தரம் ஆகும். ஆஸ்டின் தமிழ் சங்கத்தில், 2021 ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்துள்ளார்.

ஈரான் கொடி பொறிக்கப்பட்ட உடையுடன் துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு நடத்திய நபர், ஈரானியக் கொடி பொறிக்கப்பட்ட டி-சர்ட்டும், “அல்லாஹ்வின் சொத்து” என்று எழுதப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார்.

விசரணையில், அவர் செனகலைச் சேர்ந்த 53 வயதான அமெரிக்க குடிமகனான நிடியாகா டியாக்னே எனவும், 2000 ஆம் ஆண்டில் B2 விசா மூலம் முதல்முறையாக அமெரிக்கா வந்துள்ளார் என்றும், அவரது வீட்டில் ஈரான் கொடி மற்றும் ஈரானிய தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், சமீபத்திய ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு தொடர்புடைய நபரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *