ஈரான் மீதான போர் – உயரும் பெட்ரோல், தங்கம் விலை

1 Min Read

ஈரான் இஸ்ரேல் இடையேயான போரால் தங்கம் வெள்ளி பெட்ரோல் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்து பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் விளக்கமளித்துள்ளார்.

போரால்  உயரும் பெட்ரோல் தங்கம் விலை

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு முழுவதும் இந்த போர் விரிவடைந்து வருகிறது.

உலகின் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் சுமார் 20 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 25 சதவீதமும் கொண்டு செல்லப்படும்.ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவின்(Saudi Aramco) ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பற்றியதில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த போர் காரணமாக தங்கம் வெள்ளி விலை உயருமா, கச்சா எண்ணெய் விலை உயருமா, பெட்ரோல் விலை உயருமா, பங்குசந்தையில் என்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் விளக்கமளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *