உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் – உயரும் கச்சா எண்ணெய் விலை

1 Min Read

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சவுதி அரம்கோ மீது தாக்குதல்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் - உயரும் கச்சா எண்ணெய் விலை | Saudi Aramco Shuts Down After Drone Attack

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில், சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவின்(Saudi Aramco) ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் சிறிய தீ விபத்து ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அரம்கோ தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதாக அரம்கோ அறிவித்துள்ளது.

எண்ணெய் விலை உயர்வு

சவூதி அரேபியா அரசுக்கு சொந்தமான சவுதி அரம்கோ நிறுவனம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் ஆகும்.

இது ஒரு நாளைக்கு 550,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது தாக்குதல் - உயரும் கச்சா எண்ணெய் விலை | Saudi Aramco Shuts Down After Drone Attack

இந்த அறிவிப்பையடுத்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டொலர் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

உலகின் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் சுமார் 20 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 25 சதவீதமும் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

போர் இன்னும் தொடர வாய்ப்புள்ள நிலையில், எண்ணெய் விலை பாரிய உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *