திங்கட்கிழமையன்று எதிரி நாட்டு படைகளுக்கு சொந்தமான F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் உடனான நேரடி மோதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானுடன் மூன்றாவது நாளாக நேரடி போர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது மத்திய கிழக்கு நாடுகளில் முழு அளவிலான போர் நடவடிக்கையாக மாறியுள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி குறிவைத்து கொல்லப்பட்ட சம்பவம் ஈரானை மிகப்பெரிய அளவில் உலுக்கியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு ஈரான் ராணுவம் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய படைகளுக்கு சொந்தமான F-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 ரக போர் விமானம்
திங்கட்கிழமை ஈரான் வெளியிட்ட தகவலில், எதிர் படையின் F-15 ரக போர் விமானம் குவைத் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் F-15 ரக போர் விமானம் தீப்பிடித்து தரையை நோக்கி சுழன்று கொண்டே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
F-15 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஈரான் உரிமை கோரினாலும், இவை தவறுதலாக தங்களுக்குள்ளேயே நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று தகவல் கூறப்படுகின்றன.
மேலும் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பத்திரமாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
அதே சமயம் F-15 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.




