சஞ்சு சாம்சன் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடினார்: தோல்வி குறித்து பேசிய மேற்கிந்திய தீவுகளின் கேப்டன்

1 Min Read

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா வெற்றி

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.

Sanju Samson

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 195 ஓட்டங்கள் குவித்தது. சேஸ் 40 (25) ஓட்டங்களும், ஹோல்டர் 37 (22) ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 97 ஓட்டங்கள் (4 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) விளாசினார்.

இதன்மூலம் இந்தியா 19.2 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Sanju Samson

சஞ்சு சாம்சன் பாராட்டு

இந்திய அணி வருகிற 5ஆம் திகதி நடைபெற உள்ள இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ், “வெளிப்படையாக, இது ஒரு சிறந்த உணர்வு. சஞ்சு சாம்சன் துடுப்பாட்டம் செய்த விதம், அணியை முழுமையாக வெற்றிக்கு அழைத்துச் சென்றது. முதல் ஆட்டத்தில் இருந்தே நாங்கள் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது, அரையிறுதி வரை அந்த இடத்திற்கு செல்வதற்கு நாங்கள் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.

Suryakumar Yadav

அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஷாய் ஹோப், “நாங்கள் இருந்த நிலையில் back-endயில் இன்னும் கொஞ்சம் சென்றிருக்கலாம் என்று நாங்கள் உணர்ந்தோம். ஆனால் நாங்கள் விரும்பிய அளவிற்கு துடுப்பாட்டத்தில் சிறப்பாக தொடங்கவில்லை. எங்கள் வீரர்கள் நல்ல முயற்சி எடுத்து முடிந்தவரை கடினமாக போராடினர். சஞ்சுவும் ஒரு நல்ல இன்னிங்ஸை விளையாடினார். அவருக்கு அந்த பெருமையை கொடுக்க வேண்டும்” என்றார்.

Sanju Samson

Sanju Samson/Shimron Hetmyer

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *