இராணுவ நடவடிக்கை ஒரு பக்கம்… மொத்த ஈரானிய மக்களையும்: இஸ்ரேலின் அதிர்ச்சி திட்டம்

1 Min Read

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்ற நிலையில், இன்னொரு திட்டத்தை முன்னெடுக்க இஸ்ரேல் தீவிரம் காட்டி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

இஸ்ரேல் தந்திரம்

இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மொத்த ஈரானிய மக்களையும் அரசாங்கத்திற்கு எதிராக திருப்புவதால் மட்டுமே ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என இஸ்ரேல் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கை ஒரு பக்கம்... மொத்த ஈரானிய மக்களையும்: இஸ்ரேலின் அதிர்ச்சி திட்டம் | Israel Working To Get Iranians

தமது அடையாளத்தை வெளியிட மறுத்துள்ள அந்த அதிகாரி, ஆட்சிக்கு எதிராக ஈரானியர்களை எதிர்த்துப் போராட ஊக்குவிக்க இஸ்ரேல் என்ன தந்திரங்களைப் பயன்படுத்தப் போகிறது என்பதை வெளியிடவும் மறுத்துள்ளார்.

ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகளின் தூண்டுதல் என கூறப்படும் போராட்டங்களில் பல ஆயிரக்கணக்கான அப்பவி மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில்,

தற்போது மீண்டும் ஒரு மக்கள் போராட்டத்திற்கு இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுவது, மேலும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமாகும் என்றே அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தாக்குதலில் உயர் தலைவர் அலி காமெனியும் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஈரான் நிர்வாகத்தை துணிந்து பல நடவடிக்கைகளை முன்னெடுக்க தூண்டும்.

இராணுவ நடவடிக்கை ஒரு பக்கம்... மொத்த ஈரானிய மக்களையும்: இஸ்ரேலின் அதிர்ச்சி திட்டம் | Israel Working To Get Iranians

கடும்போக்கு நடவடிக்கை

மட்டுமின்றி அலி காமெனி போன்ற மத நம்பிக்கையாளர்கள் இனி ஈரானின் உயர் பொறுப்புக்கு வர வாய்ப்பில்லை என்பதால், அடுத்து வரும் இராணுவ அதிகாரிகளால் கடும்போக்கு நடவடிக்கைகளே அதிகரிக்கும்.

இந்த நிலையில், நாம் பெற்றுள்ள வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை என குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரே அடியில் 48 தலைவர்களை அழித்துள்ளோம் என்றார்.

இராணுவ நடவடிக்கை ஒரு பக்கம்... மொத்த ஈரானிய மக்களையும்: இஸ்ரேலின் அதிர்ச்சி திட்டம் | Israel Working To Get Iranians

மட்டுமின்றி, நாம் திட்டமிட்டபடியே இராணுவ நடவடிக்கைகளும் வேகமாக முன்னேறி வருகிறது என்றார். ஈரானின் தலைமையை அகற்றி அதன் இராணுவத்தை அழிக்கும் நோக்கத்துடன் சனிக்கிழமை தொடங்கப்பட்ட இந்தப் போரில் ஒட்டுமொத்த வெற்றியைப் பெற்றுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் மீதான தாக்குதல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் எங்களுக்காக மட்டுமின்றி உலகத்துக்காகவும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *