அயதுல்லா அலி காமெனி சகாப்தத்தின் முடிவு: வாரிசு அரசியல் மற்றும் குடும்ப பின்னணி

1 Min Read

ஈரானின் உச்ச தலைவராக 1989 இருந்து வந்த அயதுல்லா அலி காமெனியின் நீண்ட ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி காமெனி உயிரிழந்ததை ஈரானிய ஊடகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை தீவிரமாக முன்னெடுத்து வந்த காமெனி உயிரிழந்து இருப்பது ஈரானில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயதுல்லா அலி காமெனி சகாப்தத்தின் முடிவு: வாரிசு அரசியல் மற்றும் குடும்ப பின்னணி | Ali Khamenei Family And Who Is Next Supreme Leader

ஈரானின் அதிகார மையம்

ஈரானில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகள் இருந்தாலும் உச்ச தலைவரின் முடிவு தான் இறுதியானதாக பார்க்கப்படுகிறது.

ஈரானின் உச்ச தலைவர் தான் நாட்டின் ராணுவம், நீதித்துறை மற்றும் பாதுகாப்பு படை ஆகியவற்றின் இறுதி முடிவுகளை எடுப்பார்.

அயதுல்லா அலி காமெனி சகாப்தத்தின் முடிவு: வாரிசு அரசியல் மற்றும் குடும்ப பின்னணி | Ali Khamenei Family And Who Is Next Supreme Leader

குடும்பத்தின் இழப்பு

உச்ச தலைவர் காமெனி, மன்சூர் கோஜஸ்தே பாகர்ஜாதே என்பவரை மணந்த நிலையில், அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

இதில் மொஸ்தபா, மொஜ்தபா, மசூத் ஆகிய 3 மகன்கள் மட்டும் பொது உலகில் அறியப்பட்டவர்கள். சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காமெனியின் மருமகன் மற்றும் மருமகள் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மகன் மொஜ்தபா காமெனி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் அந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

யார் இந்த மொஜ்தபா காமெனி

அயதுல்லா அலி காமெனி சகாப்தத்தின் முடிவு: வாரிசு அரசியல் மற்றும் குடும்ப பின்னணி | Ali Khamenei Family And Who Is Next Supreme Leader

ஈரானில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை, அல் காமெனியின் மகனான மொஜ்தபா காமெனி அடுத்த தலைவராக வருவதற்கும் அவ்வளவாக வாய்ப்பு இல்லை.

ஏனென்றால், ஈரானின் அரசியலமைப்பு படி, ஈரானின் அடுத்த தலைவர் மதகுருமார்களை கொண்ட நிபுணர்கள் குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இருப்பினும் மொஜ்தபா காமெனி செல்வாக்கு ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர படையுடன் நெருங்கி இருப்பதால் அவர் சக்திவாய்ந்த வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொஜ்தபா காமெனி தற்போது அரசு பதவிகளில் இல்லாவிட்டாலும், அவர் ஈரான் நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் செல்வாக்கு கொண்டவராக அறியப்படுகிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *