ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது தொடர்பான முக்கிய தகவலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குறிவைத்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு இலக்குகளை குறிவைத்து ஈரான் 137 ஏவுகணைகள் மற்றும் 209 ட்ரோன்களை ஏவி இருப்பதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலில் முக்கிய போக்குவரத்து மையங்கள் மற்றும் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 7 பேர் வரை காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.




