டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி தோல்வி: பதவி விலகும் சனத் ஜெயசூர்யா

1 Min Read

டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடம் தோல்வி

நேற்று நடந்த டி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 8 போட்டியில், இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.

Sri Lanka Cricket Team/T20 World Cup 2026

ரன்ரேட் முக்கியம் என்பதால், இந்தப் போட்டியின் முடிவை எதிர்நோக்கி நியூசிலாந்து அணி காத்திருந்தது.

பின்னர் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக 5 ஓட்டங்கள் வித்தியாசத்திலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் விளைவாக நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

பதவியில் இருந்து விலக முடிவு

இந்த நிலையில், பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா (Sanath ஜெயசூரியா) தனது தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

Sanath Jayasuriya

இந்த முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டதாக அவர் கூறிய நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

முன்னதாக, ஜெயசூரியா இரண்டு முறை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக பணியாற்றினார்.

Sanath Jayasuriya

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *