அமெரிக்கா-இஸ்ரேல் மீது வரலாறு காணாத தாக்குதல்: ஈரான் ராணுவம் சூளுரை

1 Min Read

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது.

ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி படுகொலை

ஈரான் மீது நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈரானிய உச்ச தலைவர் அலி காமெனி அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டார்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை ஞாயிற்றுக்கிழமை ஈரான் அரசு ஊடகமாக IRIB உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மீது வரலாறு காணாத தாக்குதல்: ஈரான் ராணுவம் சூளுரை | Irgc Vowed To Massive Military Attack On Us Israel

அதே சமயம் இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் காவல் படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 85 மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் சூளுரை

அமெரிக்கா-இஸ்ரேல் மீது வரலாறு காணாத தாக்குதல்: ஈரான் ராணுவம் சூளுரை | Irgc Vowed To Massive Military Attack On Us Israel

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது வரலாறு காணாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை(IRGC) எச்சரித்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதை அரசு ஊடகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து IRGC வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க பயங்கரவாதிகளின் தளங்கள் மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் வரலாறு காணாத தாக்குதலை ஈரானிய ராணுவம் சில நிமிடங்களில் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *