ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு மிகப்பெரிய பதிலடி கொடுப்போம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் சூளுரை
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பது மத்திய கிழக்கு பகுதியில் பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
உச்ச தலைவர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஈரானில் 40 நாட்கள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் மீது வரலாறு காணாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை(IRGC) சூளுரைத்துள்ளது.
அதில் அமெரிக்க பயங்கரவாதிகளின் தளங்கள் மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் வரலாறு காணாத தாக்குதல் விரைவில் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் எச்சரிக்கை
இந்நிலையில், ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டால், ஈரான் இதுவரை பார்த்திராத அமெரிக்காவின் மிகப்பெரிய தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேரடியாக எச்சரித்துள்ளார்.
தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியலில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தளங்கள் மீது ஈரான் நடத்தும் எந்தவொரு பழிவாங்கள் தாக்குதல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்த போவதாக தெரிவித்துள்ளனர், அதனை நடத்தாமல் இருப்பதே அவர்களுக்கு நல்லது! ஒருவேளை அவர்கள் தாக்குதல் நடத்தினால், இதுவரை பார்த்திராத மிகப்பெரிய பதிலடியை நாங்கள் கொடுப்போம்.” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.




