அலி காமெனிக்குப் பதிலாக இவர்கள் பொறுப்பெடுத்தால்… இன்னும் ஆபத்தாக மாறும் ஈரான்

2 Min Read

அலி காமெனி கொல்லப்பட்டுள்ளதாக நம்புவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அவருக்கு மாற்றாக பொறுப்புக்கு வர வாய்ப்பிருக்கும் சிலரால் ஈரான் மிக ஆபத்தான நாடாக மாறலாம் என கூறுகின்றனர்.

அடுத்த வாய்ப்பு

ஈரானின் உயர் தலைவரின் மரணம் என்பது ஈரானுக்கு அரசியல் மற்றும் மத ரீதியான பூகம்பமாகும். ஈரானின் மதகுருமார்கள், இராணுவம் மற்றும் அரசியல் தலைமையின் அனைத்து கூறுகளின் ஆதரவையும் கொண்ட ஒரு வெளிப்படையான வாரிசு இல்லை என்றே கூறப்படுகிறது.

அலி காமெனிக்குப் பதிலாக இவர்கள் பொறுப்பெடுத்தால்... இன்னும் ஆபத்தாக மாறும் ஈரான் | Iran Even More Dangerous

மட்டுமின்றி, அலி காமெனியின் பொறுப்புக்கு வரக்கூடியவர்களில் சிலர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறுகின்றனர். அலி காமெனிக்குப் பிறகு உயர் தலைவராக கடும்போக்கு ஜனாதிபதி Ebrahim Raisi வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 2024 மே மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் அவர் கொல்லப்பட்டார். அலி கமெனியின் மகன்களில் ஒருவர், 55 வயதான Mojtaba Khamenei தற்போதைய தாக்குதலில் கொல்லப்படாமல் தப்பியிருந்தால், அவருக்கும் அடுத்த வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், அலி காமெனியின் பொறுப்பை IRGC ஏற்கும் என்றால், ஈரானில் மத அடிப்படையிலான ஆட்சி அமையாது, மாறாக இராணுவ அரசாங்கம் அமையும்.

அமெரிக்காவின் உளவு அமைப்புகளும் இதையே குறிப்பிட்டுள்ளன. IRGC அமைப்பின் மிகக்கொடூரமான கடும்போக்கு தலைவர்கள் எவரேனும் உயர் தலைவர் பொறுப்புக்கு வரவே அதிக வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளனர்.

அப்படி ஒரு நகர்வு முன்னெடுக்கப்பட்டால், ஈரானிய மக்கள் தங்கள் அரசாங்கத்தை தூக்கியெறிய அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், மக்கள் போராட்டங்களுக்கு இன்னும் மிருகத்தனமான ஒடுக்குமுறைகள் எதிர்பார்க்கலாம்.

மட்டுமின்றி, அணு ஆயுதங்களைக் கைவிட அமெரிக்காவால் அழுத்தமளிக்க முடியாமல் போகும். Ali Larijani போன்ற முன்னாள் IRGC அதிகாரி உயர் தலைவர் பொறுப்புக்கு வந்தால் நெருக்கடி மேலும் இறுக்கமாகும் என்றே கூறுகின்றனர்.

பலி கொடுக்க

இருப்பினும், தத்துவப் பேராசிரியரும் பயிற்சி பெற்ற கணிதவியலாளருமான லாரிஜானி, நாட்டை திறம்பட நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஈரானிய அரசியலமைப்பின் பிரிவு 111 இன் படி, காமெனியின் மறைவைத் தொடர்ந்து ஜனாதிபதி, நீதித்துறைத் தலைவர் மற்றும் கார்டியன் கவுன்சிலின் ஒரு சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கவுன்சில் தற்காலிகமாகப் பொறுப்பேற்கும்.

அடுத்த உயர் தலைவரை 88 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர்கள் சபை தெரிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படும். அடுத்த உயர் தலைவர் யார் என்பது பற்றிய விவாதங்கள் அனைத்தும் ரகசியமாக முன்னெடுக்கப்படும்.

அலி காமெனிக்குப் பதிலாக இவர்கள் பொறுப்பெடுத்தால்... இன்னும் ஆபத்தாக மாறும் ஈரான் | Iran Even More Dangerous

எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்கு ட்ரம்ப் முடிவெடுக்கலாம் என்ற நிலையில், அலி காமெனி மற்றும் முதன்மையான தலைவர்கள் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றே கூறுகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நெருக்கம் தொடர்பில் நன்கு புரிந்து வைத்திருக்கும் ஈரான் நிர்வாகம், உயர் தலைவரை பலி கொடுக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், இஸ்ரேல் ஊடகங்கள் அவர் கொல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியிடுவது என்பது உளவியல் தாக்குதல் என்றே ஈரான் செய்தி நிறுவனங்களும் குறிப்பிடுகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *