கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும்… கவனம் ஈர்க்கும் அலி காமெனியின் புதிய பதிவு

1 Min Read

இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உயர் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அலி காமெனியின் டுவிட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

போதிய ஆதாரம்

ஈரானின் உயர் தலைவர் அலி காமெனியின் குடியிருப்பு வளாகம் மீது 30 குண்டுகள் வீசப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் அலி காமெனியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டதாக இஸ்ரேலும் அமெரிக்காவும்... கவனம் ஈர்க்கும் அலி காமெனியின் புதிய பதிவு | Iran Ali Khamenei New Post

ஈரானில் அமைந்துள்ள அவரது குடியிருப்பில் இருந்து இஸ்ரேல் அதிகாரிகள் எப்படி அலி காமெனியின் சடலத்தை மீட்டார்கள் என்பது குறித்த விளக்கங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் தங்களிடம் போதிய ஆதாரமிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் அவை வெளியிடப்படும் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்களையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பதிவு செய்துள்ளார். ஆனால், வெள்ளை மாளிகையும் அமெரிக்க உளவு அமைப்புகளும் இதுவரை அலி காமெனி கொல்லப்பட்டது தொடர்பில் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

புகைப்படம் ஒன்று

ஆனால், ஊடகங்களை சந்தித்த ட்ரம்ப், அலி காமெனி கொல்லப்பட்டதை நம்புவதாக தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, ஈரானிய மக்கள் இனி நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையிலேயே, அலி காமெனியின் சமூக ஊடக பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், ஹைதரின் பெயரால், சாந்தி உண்டாகட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், வானத்தில் இருந்து பல எண்ணிக்கையிலான வாள் கீழிறங்கி வருவது போலவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *