ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஓவர்.. இங்கிலாந்து வெற்றியால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வாய்ப்பு

2 Min Read

இங்கிலாந்துடனான போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு குறித்து பார்க்கலாம்.

இங்கிலாந்திடம் வீழ்ந்த நியூசிலாந்து

2026 T20 உலக கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்று போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஓவர்.. இங்கிலாந்து வெற்றியால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வாய்ப்பு | Pakistan Chance For Semii Final After Eng Beat Nz

அதிகபட்சமாக சைபர்ட் 35 ஓட்டங்களும், பிலிப்ஸ் 39 ஓட்டங்களும் குவித்தனர்.

160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட இந்த போட்டியில், 18வது ஓவரில் பிலிப்ஸ் 22 ஓட்டங்களை வாரி வழங்கியதன் மூலம், ஆட்டத்தின் போக்கு மாறியது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஓவர்.. இங்கிலாந்து வெற்றியால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வாய்ப்பு | Pakistan Chance For Semii Final After Eng Beat Nz

அதிகபட்சமாக, டாம் பேண்டன் 33 ஓட்டங்களும், வில் ஜாக்ஸ் 32 ஓட்டங்களும் குவித்தனர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 32 ஓட்டங்களும் 2 விக்கெட்களும் கைப்பற்றிய வில் ஜாக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு?

ஏற்கனவே 2 வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இங்கிலாந்து அணி, இந்த ஹாட்ரிக் வெற்றியின் மூலம், நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ஏற்கனவே B பிரிவில் 2 தோல்விகளுடன் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஓவர்.. இங்கிலாந்து வெற்றியால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வாய்ப்பு | Pakistan Chance For Semii Final After Eng Beat Nz

நியூசிலாந்து அணி 3 புள்ளிகள் மற்றும் +1.390 ரன்ரேட் உடன் புள்ளிப்பட்டியில் 2வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 1 புள்ளியுடன் -0.461 ரன்ரேட் உடன் 3வது இடத்தில் உள்ளது.

இன்றைய இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில், பாகிஸ்தான் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது 13.1 ஓவரில் இலக்கை எட்டினாலோ அரையிறுதிக்கு தகுதி பெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *