நடிகர் விஜய் தேவரகொண்டாவை கரம்பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவரை அறிமுகப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

நேற்றைய தினம் இவர்களது திருமணம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஹொட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
நட்சத்திர ஜோடிக்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டா தமது திருமணப் புகைப்படங்களை வெளியிட்டார்.

உருக்கமான பதிவு
அத்துடன், “ஒருநாள், அவளுடைய நினைவு என்னை வாட்டியது. அவள் என் அருகில் இருந்திருந்தால், அந்த நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும் அளவிற்கு ஒரு ஏக்கம். அவள் எனக்கு எதிரே அமர்ந்து சாப்பிட்டிருந்தால், அந்த உணவு இன்னும் நிறைவாக இருந்திருக்கும் என்று தோன்றியது” என கூறியிருந்தார்.

அதேபோல் ராஷ்மிகா மந்தனாவும் தனது பதிவில், “அன்பானவர்களே, இப்போது எனது கணவர் அறிமுகம் செய்கிறேன்! திரு.விஜய் தேவரகொண்டா!! உண்மையான காதல் எப்படி இருக்கணும் என்று எனக்கு கற்றுக்கொடுத்த மனிதர், அமைதியா இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்குக் காட்டினவர்! பெரிய கனவுகள் காண்பது சரிதான் என்று தினமும் சொன்னவர், நான் எப்பவும் சாதிக்க முடியும் என்று தொடர்ந்து சொன்ன மனிதர்!
யாரும் பார்க்காத மாதிரி நான் ஆட, என்னைத் தடுக்காதவர்..நண்பர்களுடன் பயணம் செய்வது எப்போதும் சிறந்த விடயம் என்று காட்டியவர், நம்புங்கள்..இவரைப் பற்றி நான் ஒரு புத்தகமே எழுதலாம்! நான் எப்போதும் கனவில் கண்ட பெண்ணாக மாறிவிட்டேன், ஏனென்றால் நீங்கள்தான் அவளை இன்று இங்கு இருக்க வைத்துள்ளீர்கள்! நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள்!” என கூறியுள்ளார்.




