இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்த 22 வயது வீரர்! டி20 உலகக்கிண்ணத்தில் சாதனை

1 Min Read

டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

இந்திய அணி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின.

Abhishek Sharma

முதலில் ஆடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ஓட்டங்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ஓட்டங்களும் விளாசினர்.

Hardik Pandya

பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

எனினும், தொடக்க வீரர் பிரையன் பென்னெட் (Brian Bennett) சிக்ஸர்களை பறக்கவிட்டு 97 (59) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

Brian Bennett

சாதனை

இதன்மூலம், டி20 உலகக்கிண்ணத்தில் இந்திய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

2010ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) பிரிட்ஜ்டவுனில் 98 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

22 வயதாகும் பிரையன் பென்னெட் 62 போட்டிகளில் ஒரு சதம், 13 அரைசதங்களுடன் 1931 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Brian Bennett

Brian Bennett

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *