மட்டக்களப்பில் அதிகரித்த முதலைகள் நடமாட்டம்: சமூக ஆர்வலர்கள் விடுத்த எச்சரிக்கை

1 Min Read

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறைய தொடங்கிய பருவமழை

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த பருவ மழையானது குறைய தொடங்கியுள்ளது.

இந்நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமியக் குளங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் அதிகரித்த முதலைகள் நடமாட்டம்: சமூக ஆர்வலர்கள் விடுத்த எச்சரிக்கை | Batticaloa Crocodiles Activity Increased

பொதுமக்கள் தகவல் படி, போரதீவு பற்று பகுதிக்கு உட்பட்ட வெல்லாவெளி, கோயில் போரதீவு, பொறுகாமம் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கிராமியக் குளங்களில் முதலைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் மேல் குறிப்பிட்ட குளங்களில் முதலைகள் நடமாட்டம் இருந்த போது, அப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் தாக்கிய சம்பவமும் முன்னர் பதிவாகியுள்ளது.

இதனால் தற்போதைய முதலைகள் நடமாட்டம் அப்பகுதி மக்களை மேலும் கவலை அடைய வைத்துள்ளது.

மட்டக்களப்பில் அதிகரித்த முதலைகள் நடமாட்டம்: சமூக ஆர்வலர்கள் விடுத்த எச்சரிக்கை | Batticaloa Crocodiles Activity Increased

அதே சமயம், குறிப்பிட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *