இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு அரசு மரியாதைக்கு பின் சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி வருகின்றனர்.




