உலக அரசியல் தலைவர்களில் மோடிதான் முதலிடம் – எதில் தெரியுமா?

1 Min Read

இன்ஸ்டாக்ராமில் அதிக பின்தொடர்பவர்களை வைத்துள்ள பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை கோடிக்கணக்கான மக்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் உலக தலைவர்கள் அதனை ஒரு பிரச்சாரத்திற்கான தளமாகவும் பயன்படுத்துகின்றனர்.

முதலிடத்தில் மோடி

அந்தவகையில். இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போதே சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி தனது கருத்துக்களை பதிவிடுவது, அரசின் திட்டங்கள் குறித்து பதிவிடுவது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

உலக அரசியல் தலைவர்களில் மோடிதான் முதலிடம் - எதில் தெரியுமா? | Modi Become 1St World Leader 100M Insta Followers

2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி, அப்போது முதல் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வந்த மோடி தற்போது 10 கோடி பின் தொடர்பவர்களை பெற்றுள்ளார்.

இதன் மூலம், இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை வைத்துள்ள உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 4.30 கோடி பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து, 1.5 கோடி பின்தொடர்பவர்களுடன் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ 3வது இடத்திலும், 1.44 கோடி பின்தொடர்பவர்களுடன் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 4வது இடத்திலும், 1.16 கோடி பின்தொடர்பவர்களுடன் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் 5வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அளவில், மோடிக்கு அடுத்தபடியாக 1.61 கோடி பின்தொடர்பவர்களுடன் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2வது இடத்திலும், 1.26 கோடி பின்தொடர்பவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 3வது இடத்திலும் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *