சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: அசத்தும் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ

1 Min Read

சாம்சங் நிறுவனம் தங்களுடைய கேலக்ஸி S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கேலக்ஸி S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் தொழில்நுட்ப நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்  அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: அசத்தும் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ | Samsung Introduce Galaxy S26 Series Smartphones

Galaxy S26 சீரிஸில், S26, S26+ மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான S26 Ultra ஆகிய மூன்று ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சாம்சங் நிறுவனம், இந்த முறை கமேரா, வடிவமைப்பு ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல் எளிமையான மற்றும் பல்வேறு ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

அசத்தும் AI அம்சங்கள்

Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகள்(AI) வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த முறை செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் பயனர்களுக்கு எந்தவொரு குறுக்கீடு இல்லாமல் பின்னணியில் இருந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் Galaxy S26 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்: அசத்தும் அம்சங்கள், விலை விவரங்கள் இதோ | Samsung Introduce Galaxy S26 Series Smartphones

இது குறித்து சாம்சங் ஸ்மார்ட்போன் பிரிவின் தலைவர் TM Roh வழங்கிய தகவலில், Galaxy S26 சீரிஸில் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் இணைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் போது இதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தன்னுடைய பின்னணியில் அதன் வேலையை செய்யும் என தெரிவித்துள்ளார்.

S26 Ultra-வின் பிரைவசி டிஸ்ப்ளே

இந்த S26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் பிரீமியம் மாடலான S26 Ultra தனித்துவமான ஹார்டுவேர் மாற்றத்தை பெற்றுள்ளது.

அதாவது S26 Ultra-வில் தனித்துவமான பிரைவசி டிஸ்ப்ளே என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனர்களின் பக்கவாட்டில் இருப்பவர்களுக்கு திரையில் உள்ள விஷயங்கள் தெளிவாக தெரியாது மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.

விலை மற்றும் முன்பதிவு

Galaxy S26 சீரிஸில், Galaxy S26 ஸ்மார்ட்போனின் விலை: $899, Galaxy S26+ ஸ்மார்ட்போனின் விலை: $1,099, Galaxy S26 Ultra விலை: $1,299 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மாடல்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *