ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது – ஒப்புக்கொண்ட பில்கேட்ஸ்

1 Min Read

ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில்கேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

எப்ஸ்டீன் ஆவணத்தில் பில்கேட்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது.

இதில், டிரம்ப் உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

bill gates with epstein

இதில், ரஷ்யா பெண்களுடன் உறவு கொண்டதால் பில்கேட்ஸ்க்கு பால்வினை நோய் ஏற்பட்டதாகவும், தனது மனைவிக்கு தெரியாமல் அதற்கு மருந்து வழங்குமாறு கேட்டதாகவும், பின்னர் இது குறித்த மின்னஞ்சல்களை நீக்குமாறு பில்கேட்ஸ் மன்றாடியதாகவும் எப்ஸ்டீன் தனக்கு தானே அனுப்பிய ஈமெயிலில் குறிப்பிட்டுள்ளார்.

bill gates admit affair with russia women

மேலும், பில்கேட்ஸ் முகம் மறைக்கப்பட்ட பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்தது.

ஆனால் முதலில் இந்த குற்றச்சாட்டை மறுத்த பில்கேட்ஸ், “அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருமுறை கூட சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.

அவருக்கு பல பணக்காரர்களைத் தெரியும் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற முடியும் என்று நினைத்தேன்” என கூறினார்.

ஒப்புக்கொண்ட பில்கேட்ஸ்

இந்நிலையில் டவுன்ஹால் கூட்டம் ஒன்றில் பேசிய பில்கேட்ஸ், தனக்கு 2 ரஷ்யா பெண்களுடன் தொடர்பு இருந்ததாக  ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அந்த இரு பெண்களும் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட எந்த பெண்களுடன் எனக்கு தொடர்பு இல்லை. நான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. சட்டவிரோதமாக எதையும் பார்க்கவில்லை.

ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்தது - ஒப்புக்கொண்ட பில்கேட்ஸ் | Bill Gates Admits Had Affair With Russian Women

முகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் உள்ள பெண்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வணிகக் கூட்டங்களுக்குப் பிறகு எப்ஸ்டீனின் வேண்டுகோளின் பேரில் அவரது உதவியாளர்களுடன் எடுக்கப்பட்டது.

எப்ஸ்டீனுடன் நேரத்தை செலவிட்டதும், கேட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை அவருடனான சந்திப்புகளில் ஈடுபடுத்தியதும் மிகப்பெரிய தவறு.

எப்ஸ்டீனுடனான எனது கடந்தகால தொடர்பு காரணமாக நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காகவும், நான் செய்த தவறு காரணமாக இதில் ஈர்க்கப்பட்ட மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *