இன்று முதல்… பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

1 Min Read

இன்று புதன்கிழமை, அதாவது, பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், பிரித்தானியாவுக்கு பயணிக்கும் சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், மின்னணு பயண அனுமதி ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

மின்னணு பயண அங்கீகாரம்

இன்று முதல், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா உட்பட 85 நாடுகளைச் சேர்ந்தவர்கள், முன்கூட்டியே அனுமதி பெறவில்லையென்றால் பிரித்தானியாவுக்குள் நுழையமுடியாது. அவர்கள், மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authorization – ETA) என்னும் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்கவேண்டும்.

இன்று முதல்... பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி | Uk Impose Eta Mandatory For Foreign Visitors

இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 16 பவுண்டுகள் ஆகும்.

ஆனால், விரைவில் அதை 20 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுவருகிறது.

பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்கள் மட்டுமின்றி, பிரித்தானியா வழியாக வேறு நாடுகளுக்கு தங்கள் பயணத்தை தொடர்பவர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.

இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு வேறு விதி

விடயம் என்னவென்றால், பிரித்தானியா மற்றும் மற்றொரு நாட்டின் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இந்த மின்னணு பயண அங்கீகாரத்தை பெற முடியாது.

இன்று முதல்... பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி | Uk Impose Eta Mandatory For Foreign Visitors

அவர்கள், ஒன்றில் பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும், இல்லையென்றால், certificate of entitlement என்னும் சான்றிதழை வாங்கி, அதை தங்களிடம் இருக்கும் பாஸ்போர்ட்டில் இணைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த certificate of entitlement என்னும் சான்றிதழுக்கான கட்டணம் 589 பவுண்டுகள் ஆகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *