அமெரிக்க கடற்படை நடுவே நுழைந்த ரஷ்ய போர் கப்பல் – ஈரானுக்கு நகரத்தப்படுமா ரஷ்ய அணு ஆயுதங்கள்?

1 Min Read

ஈரானை தாக்கும் நோக்கில் மத்திய கிழக்கில் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ள நிலையில், ரஷ்ய போர் கப்பல் ஈரானில் நிறுத்தப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தளத்தில் ரஷ்ய போர் கப்பல்

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், அமெரிக்கா தனது 2 பாரிய விமானம் தாங்கி போர் கப்பல்களை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலை நிறுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படை நடுவே நுழைந்த ரஷ்ய போர் கப்பல் - ஈரானுக்கு நகரத்தப்படுமா ரஷ்ய அணு ஆயுதங்கள்? | Russia War Ship Deployed In Iran In Us War Tension

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் தாக்கி அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் எந்த நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன.

அமெரிக்க கடற்படை நடுவே நுழைந்த ரஷ்ய போர் கப்பல் - ஈரானுக்கு நகரத்தப்படுமா ரஷ்ய அணு ஆயுதங்கள்? | Russia War Ship Deployed In Iran In Us War Tension

ஆனால், பயிற்சி முடிந்த பின்னரும் ரஷ்யாவின் கொர்வெட் ஸ்டோய்கி (F545) என்ற போர் கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க கடற்படை நடுவே நுழைந்த ரஷ்ய போர் கப்பல் - ஈரானுக்கு நகரத்தப்படுமா ரஷ்ய அணு ஆயுதங்கள்? | Russia War Ship Deployed In Iran In Us War Tension

ரஷ்யா போர் கப்பல் ஈரான் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது 3 ஆம் உலக போராக மாற வாய்ப்புள்ளது என பிரித்தானியா கடற்படையில் 27 ஆண்டுகள் பணியாற்றி 4 போர் கப்பல்களை வழி நடத்திய tom sharpe எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில் இது எவ்வாறு உலக போராக மாறும், ரஷ்யா இந்த போரில் கலந்து கொள்ள எந்த வகையில் வாய்ப்புள்ளது, ரஷ்யா பெலாரஸுக்கு தனது அணு ஆயுதங்களை நகர்த்தியது போல் ஈரானுக்கும் நகர்த்துமா என IBC தமிழ் உண்மையின் தரிசனம் நிகழ்வில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *