ஜிம் ஜாங் உன் சகோதரிக்கு புதிய அதிகாரமிக்க பொறுப்பு: உறுதிப்படுத்திய வட கொரிய ஊடகம்

1 Min Read

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரிக்கு புதிய அதிகாரமிக்க பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிம் யோ ஜாங்-கிற்கு புதிய பொறுப்பு

வட கொரியாவின் ஆளும் வர்க்கத்தின் புதிய மாற்றமாக ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங்-கிற்கு புதிய புதிய அதிகாரமிக்க பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது கிம் யோ ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவில் துணைத் துறை இயக்குநராக இதுவரை இருந்த நிலையில், தற்போது அவர் முழுத் துறை இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வட கொரியாவின் அரசு ஊடகம் செவ்வாய்க்கிழமை அன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஜிம் ஜாங் உன் சகோதரிக்கு புதிய அதிகாரமிக்க பொறுப்பு: உறுதிப்படுத்திய வட கொரிய ஊடகம் | Kim Yo Jong Powers Uplifted In North Korea

இந்த முக்கிய அறிவிப்பு வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 9வது கட்சி காங்கிரஸ் கூட்டத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காங்கிரஸ் சந்திப்பின் போது தான், வட கொரியாவின் இராணுவ வியூகங்கள் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பொருளாதாரம் ஆகியவை தீர்மானிக்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *