அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 65% அமெரிக்கர்கள்: புதிய கருத்து கணிப்பு முடிவுகள்

1 Min Read

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது பெரும்பான்மையான அமெரிக்கர்கள் அதிருப்தியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அரசாங்க செயல்பாடுகள் குறித்து ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து புதிய கருத்துக்கணிப்புகளை நடத்தியுள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்புகளில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டின் பண வீக்கத்தை கையாளுவதில் தோல்வியடைந்து இருப்பதாக 65% அமெரிக்கர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 65% அமெரிக்கர்கள்: புதிய கருத்து கணிப்பு முடிவுகள் | 65 Percent American Dissatisfied With Trump

மேலும் டிரம்பின் பரஸ்பர வரி கொள்கைகளை 64% அமெரிக்கர்கள் எதிர்த்தும், 34% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டிரம்பின் அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளை 62% அமெரிக்கர்கள் அங்கீகரிக்கவில்லை.

குடியேற்ற கொள்கைகள் மீது 58% அமெரிக்கர்கள் அதிருப்தியில் இருப்பதுடன் குடியேற்ற கொள்கைகளை நிலைநாட்டுவதற்கு ராணுவத்தை பயன்படுத்தும் முறைக்கு 54% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்க பொருளாதார நிர்வாகத்தில் 57% அமெரிக்கர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்புகள், டிரம்பின் பரஸ்பர வரி கொள்கைகளை ரத்து செய்வதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட சமீபத்திய சர்வே என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான அமெரிக்க ஜனாதிபதி?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராக 65% அமெரிக்கர்கள்: புதிய கருத்து கணிப்பு முடிவுகள் | 65 Percent American Dissatisfied With Trump

அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் மோசமான ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்பை 40% அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்து இருப்பதாக Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்பை வெறும் 12% அமெரிக்கர்கள் மட்டுமே சிறந்த அதிபராக கருதி வருவதாகவும், டிரம்பை அங்கீகரிக்கும் விகிதம் 39% ஆக குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *