அவரது செல்வாக்கு காலத்தால் அழியாதது! முரளிதரனை வழிநடத்திய பயிற்சியாளர்..குமார் சங்ககாரா இரங்கல்

1 Min Read

கிரிக்கெட் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் மறைவுக்கு இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுனில் பெர்னான்டோ

இலங்கையின் கிரிக்கெட் வட்டாரங்களில் பயிற்சியாளராக செயல்பட்டதற்காக பரவலாக மதிக்கப்பட்டவர் சுனில் பெர்னான்டோ.

Sunil Fernando

இவர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உட்பட பல தேசிய வீரர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

அதேபோல் நாட்டில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கும், உத்வேகம் அளிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்று புகழப்பட்டுள்ளார்.

சங்ககாரா இரங்கல்

இந்த நிலையில், நீண்ட காலமாக நோயுடன் போராடி வந்த சுனில் பெர்னாண்டோ காலமானார். அவருக்கு இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kumar Sangakkara

குமார் சங்ககாரா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “திரு.சுனில் பெர்னாண்டோ நீண்ட காலமாக நோயுடன் போராடிய பிறகு காலமானார். நான் இதுவரை பணியாற்றிய சிறந்த துடுப்பாட்ட பயிற்சியாளர் அவர்.

எனக்கு 14 வயதில் இருந்து எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடிக்கும் வரை எனது துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டர்.

பல கிரிக்கெட் வீரர்கள் (முரளிதரன் உட்பட) மீது இருந்த அவரது செல்வாக்கு காலத்தால் அழியாதது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என கூறியுள்ளார்.

Sunil Fernando/Muttiah Muralitharan

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *