வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு:இலங்கையில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபர் கைது

1 Min Read

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடி செய்த நபர் கைது

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக நீர்கொழும்பு பகுதியில் பணமோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கிட்டத்தட்ட ரூ.55 லட்சம் பெற்று, அளித்த வாக்குறுதி படி எந்தவொரு வேலையும் வாங்கி தரவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் இறுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு:இலங்கையில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபர் கைது | Job Opp Money Fraud Suspect Arrested In Sri Lanka

வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் பறிமுதல்

இந்த விசாரணையின் போது அந்த அலுவலகத்தில் இருந்த வேலை ஒப்பந்தங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய தகவலின் படி, கைது செய்யப்பட்ட நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விசா ஆலோசனை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் நடத்தி வந்தவர்கள் மூன்று பேரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதிரடியாக கைது செய்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *