அரிய வகை நோயால் 53 வயதில் பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

1 Min Read

பிரபல ஹாலிவுட் நடிகர் எரிக் டேன் அரிய வகை நோயால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிக் டேன்

ஹாலிவுட்டில் எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டேண்ட், பேட் பாய்ஸ்: ரைட் ஆர் டை போன்ற படங்களில் நடித்தவர் எரிக் டேன் (Eric Dane).

Eric Dane

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இவர் Amyotrophic lateral sclerosis (ALS) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த எரிக் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

கனத்த இதயங்களுடன்

அவரது மரணம் திரையுலகிலும், ரசிகர்கள் இடையிலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யு.எஸ்.ஏ டுடே-க்கு எரிக் டேனின் சார்பாக மெலிசா பேங்க் அளித்த அறிக்கையில், “கனத்த இதயங்களுடன், எரிக் டேன் வியாழக்கிழமை பிற்பகல் ALS உடனான ஒரு துணிச்சலான போராட்டத்திற்கு பிறகு காலமானார் என்பதை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.

Eric Dane

அவர் தனது இறுதி நாட்களை அன்பான நண்பர்கள், அவரது அர்ப்பணிப்புள்ள மனைவி மற்றும் அவரது இரண்டு அழகான மகள்கள், பில்லி மற்றும் ஜார்ஜியா ஆகியோரால் சூழப்பட்டிருந்தார்” என கூறப்பட்டுள்ளது.

Eric Dane

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *