India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ

1 Min Read

இந்தியாவில் நடைபெறும் “இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026” ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஷாங்கிரி-லா ஈரோஸ்(Shangri-la Eros) நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் “இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026”-இல்(India AI Impact Summit 2026) கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை முதல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் வரை பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

சர்வதேச கவனம் பெற்றுள்ள இந்த மாநாட்டில் ஹியூமனாய்டு ரோபோ ஒன்று விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ | Saree Clad Robot Attract India Ai Impact Summit

ஹோட்டல் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எக்கோ(Echo) என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக, ஹோட்டலின் மற்ற பெண் ஊழியர்களை போல பாரம்பரிய புடவை அணிந்து கம்பீரமாக காட்சியளித்து அனைவரையும் கவர்ந்தது.

எக்கோ ரோபோவின் சிறப்பம்சங்கள்

எக்கோ ரோபோ புடவை கட்டிய காட்சிப் பொருளாக மட்டுமல்லாமல், விருந்தினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பது, விருந்தினர்களுக்கு துல்லியமான வழிகாட்டியாக செயல்படுகிறது.

தன்னுடைய LED திரை மூலம் எக்கோ ரோபோவால் மனிதர்களை போலவே உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது, விருந்தினர்களுடனான உரையாடலை இயல்பானதாக மாற்றுகிறது.

எக்கோ ரோபோ போன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விருந்தோம்பல் துறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை வெளிகாட்டுவதே இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்று ஷாங்கிரி-லா ஈரோஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *