எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரபாகரனுடன் உள்ள இந்திய அதிகாரி – மோடி குறித்து டிரம்ப் சொன்ன விடயம்

2 Min Read

எப்ஸ்டீன் ஆவணங்களில், பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய அதிகாரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

எப்ஸ்டீன் ஆவணங்கள்

அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு பிரபலங்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரபாகரனுடன் உள்ள இந்திய அதிகாரி - மோடி குறித்து டிரம்ப் சொன்ன விடயம் | Hardeep Singh Puri In Epstein File Met Prabhakaran

இவரது மறைவிற்கு பின்னர், எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்ச பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

இதில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எலோன் மஸ்க், பில்கேட்ஸ், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், இந்திய பிரதமர் மோடி, தொழிலதிபர் அனில் அம்பானி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

ஹர்தீப் சிங் பூரி

இந்திய அரசின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சரவை மற்றும் ஐநா பாதுகாப்பு குழு ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஹர்தீப் சிங் பூரி, 2014 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரபாகரனுடன் உள்ள இந்திய அதிகாரி - மோடி குறித்து டிரம்ப் சொன்ன விடயம் | Hardeep Singh Puri In Epstein File Met Prabhakaran

2019 ஆம் ஆண்டு முதல் மோடி அரசின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்து வரும் ஹர்தீப் சிங் பூரி, இலங்கை தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

1987 ஆம் ஆண்டு ஜூலை 19 திகதி அவர் இந்தியா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியா அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார் ஹர்தீப் சிங் பூரி.

இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கும், இலங்கை பிரதமர் ஜெயவர்தனேவிற்கும் இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தம் புலிகளின் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே கையெழுத்தாக உள்ளதாக ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

தமிழீழத்தை கைவிடும் எந்த ஒரு தீர்வுக்கும் புலிகள் சம்மதிக்கமாட்டார்கள் என்று புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்தார்.

ராஜிவ் காந்தியை சந்திப்பதற்காக 24 ஜூலை 1987 அன்று புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்ட டெல்லி பயணம் முழுக்க ஹர்தீப் சிங் பூரியின் ஏற்பாட்டிலே நடைபெற்றது.

இந்த பயணம் இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதலுக்கு வித்திட்ட பயணமாக பின்னாட்களில் கருதப்பட்டது.

டெல்லியில் உள்ள அசோகா ஹொட்டலில் கருப்பு பூனை படைகளின் பாதுகாப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறை வைக்கப்பட்டதும், மிரட்டப்பட்டதும், அவமானப்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இத்தனைக்கும் அடித்தளமிட்டவர் தான் எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம் பெற்றுள்ள ஹர்தீப் சிங் பூரி.

ஹர்தீப் சிங் பூரி பாலியல் சம்பந்தமான விடயங்களில் நேரடியாக சம்மந்தப்படாவிட்டாலும், சில முதலீடுகள் தொடர்பாகவும், அப்போது புதிதாக பதவியேற்ற இந்தியா பிரதமர் மோடிக்கு எப்ஸ்டீன் உடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் ஹர்தீப் சிங் பூரி பேசிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேச்சுவார்த்தைகள் இந்தியா பிரதமர் மோடியின் சார்பில் நடைபெற்றதால் ஹர்தீப் சிங் பூரியின் பெயர் ஊடங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடி குறித்து டிரம்ப் சொன்ன விடயம்

மேலும், இன்னும் 3 மில்லியன் எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியிடப்படாமல் அமெரிக்கா நீதித்துறை மற்றும் FBI கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மோடி குறித்து அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கூறிய விடயம் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரபாகரனுடன் உள்ள இந்திய அதிகாரி - மோடி குறித்து டிரம்ப் சொன்ன விடயம் | Hardeep Singh Puri In Epstein File Met Prabhakaran

மோடியின் அரசியல் வாழ்க்கையை நான் சிதைக்க விரும்பவில்லை என டிரம்ப் கூறிய விடயத்தை, எப்ஸ்டீன் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *