ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
அமீரகம் 122 ஓட்டங்கள்
டெல்லியில் நடந்த டி20 உலகக்கிண்ணத்தின் 34வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய அமீரக அணியில் அலிஷான் ஷரஃபு 45 ஓட்டங்களும், அணித்தலைவர் முகமது வசீம் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஐக்கிய அரபு அமீரகம், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளும், நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளும், லிண்டே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்க அணி வெற்றி
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 13.2 ஓவர்களில் 123 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிரேவிஸ் (Brevis) 25 பந்துகளில் 36 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 1 பவுண்டரி), ரியான் ரிக்கெல்டன் 16 பந்துகளில் 30 ஓட்டங்களும் (2 சிக்ஸர், 3 பவுண்டரிகள்) விளாசினர்.

அமீரக அணியின் தரப்பில் ஹைதர், ஜவாதுல்லா, அர்ஃபான் மற்றும் ஃபரூக்கி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தனது கடைசி போட்டியில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி, ஒரு வெற்றியுடன் உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறியது.






