போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் படகுகள் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 11 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கப்பல்கள் மீது தாக்குதல்
லத்தீன் அமெரிக்காவின் பிராந்தியத்தில் அத்துமீறி செயல்படும் போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கடற்படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை இரவு கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் கடல் பகுதியில் மூன்று சந்தேகத்திற்குரிய கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதையும், அதில் 11 பேர் கொல்லப்பட்டு இருப்பதையும் அமெரிக்க ராணுவ உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த முதல் படகில் 4 உயிரிழப்புகளும், இரண்டாவது படகில் 4 உயிரிழப்புகளும் மற்றும் கரீபியன் கடல் பிராந்தியத்தில் நின்ற மூன்றாவது படகில் 3 பேரும் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்க தென்னக கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில், இரண்டு படகுகள் நின்று கொண்டிருக்கும் போதும், மற்றொரு படகு வேகமாக சென்று கொண்டிருந்த போதும் தாக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு முன்னதாக கப்பலில் மனித நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க படைகளின் பாதிப்பு
இந்த தாக்குதலில் அமெரிக்க படைகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அமெரிக்க படைகள் நடத்தி வரும் இந்த தாக்குதல் நடவடிக்கையில் இதுவரை 140-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பல டஜன் கணக்கான படகுகள் அழிக்கப்பட்டுள்ளது.




