போட்டோசூட்டில் மும்முரம் காட்டிய தாய் – குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை

1 Min Read

போட்டோசூட்டில் தாய் மும்முரமாக இருந்த நிலையில், குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை

கர்நாடக மாநிலம் பெங்களுருவின் ஜேபி நகரில் வசித்து வரும் சரண்ராஜ் – ஸ்வாதி தம்பதிக்கு, 3 வயதில் லக்ஸ்வீர் என்ற ஆண் குழந்தை உள்ளது.

தற்போது ஸ்வாதி 2வது குழந்தைக்கு 7 மாத கர்ப்பமாக உள்ளார். மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் சரண்ராஜ் கடந்த வாரம் பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

போட்டோசூட்டில் மும்முரம் காட்டிய தாய் - குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தை | 3 Yr Old Drowns During Mother Maternity Photoshoot

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஸ்வாதி கிடெனஹள்ளி கிராமத்தில் உள்ள தி ஷயர் ஸ்டுடியோவிற்கு தனது கர்ப்ப கால படப்பிடிப்பிற்காக ஸ்வாதி தனது குழந்தையை அழைத்து சென்றுள்ளார்.

ஸ்வாதி படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த போது, லக்ஸ்வீர் ஸ்டுடியோவில் இருந்த 3 குளங்களின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

சிறுது நேரத்திற்கு பிறகு, குழந்தையை காணாமல் ஸ்வாதி ஸ்டூடியோ முழுவதும் குழந்தையை தேட தொடங்கிய நிலையில், ஸ்டூடியோ ஊழியர் ஒருவர் குழந்தை குளத்தில் மூழ்கி இருப்பதை கண்டறிந்துள்ளார்.

குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையிலும், வரும் வழியிலே குழந்தை உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, குழந்தையின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குளத்தில் 2 அடி ஆழமே இருந்தாலும், குளத்தில் சேறு அதிகமாக இருந்ததால் குழந்தை மீண்டு வர முடியாமல் சிக்கி தவித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *