கொரிய இளைஞரை கைப்பிடிக்கும் பஞ்சாபி பெண்: இணையத்தில் ஹிட் அடிக்கும் புகைப்படம்

1 Min Read

காதலுக்கு எல்லை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பஞ்சாபி-கொரிய தம்பதிக்கு இடையே நடைபெற்ற நிச்சயதார்த்தம் இணையத்தை கவர்ந்துள்ளது.

பஞ்சாபி-கொரிய தம்பதி நிச்சயதார்த்தம்

ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பஞ்சாபி பெண்ணுக்கும், கொரிய இளைஞருக்கும் இடையே நடைபெற்ற நிச்சயதார்த்தம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இருவருக்கும் இடையிலான நிச்சயதார்த்த நிகழ்வு இந்திய கலாச்சார முறைப்படி ஷகன்(Shagan) சடங்குடன் நடைபெற்றது.

கொரிய இளைஞரை கைப்பிடிக்கும் பஞ்சாபி பெண்: இணையத்தில் ஹிட் அடிக்கும் புகைப்படம் | Punjabi Korean Couple Engagement Viral Photo

தம்பதிகள் மற்றும் நிச்சயதார்த்தம் குறித்த முழு விவரம் தெரிய வரவில்லை என்றாலும், அந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் மணப்பெண் குல்பீர் ப்ரார், தங்க நிற லெஹங்கா மற்றும் சிவப்பு நிற துப்பட்டா அணிந்து ஜொலித்தார். மணமகன் சிறப்பான சூட் அணிந்து கம்பீரமாக நின்றார்.

இணையவாசிகள் கருத்து

பஞ்சாபி-கொரிய தம்பதிக்கு பல இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு தரப்பினர் காதல் ஜோடியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையட்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் நகைச்சுவை கலந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர், அதில் குறிப்பாக ஒருவர், கிண்டலடிக்கும் விதமாக பஞ்சாபில் ஸ்க்விட் கேம் என்று தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *