19 வயதில் முதல் சர்வதேச சதம் விளாசிய கனடா வீரர்! வரலாற்று சாதனை..விழிபிதுங்கிய நியூசிலாந்து

1 Min Read

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கனடா வீரர் யுவ்ராஜ் சாம்ரா நியூஸிலாந்திற்கு எதிராக சதம் விளாசினார்.

யுவ்ராஜ் சாம்ரா

நியூசிலாந்து மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது.

Yuvraj Samra

நாணய சுழற்சியில் வென்ற கனடா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. அணித்தலைவர் தில்பிரீத் பாஜ்வா 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்து ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் யுவ்ராஜ் சாம்ரா (Yuvraj Samra) நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

Kyle Jamieson

முதல் சர்வதேச சதம்

சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட்ட யுவ்ராஜ் 58 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது முதல் சர்வதேச சதம் ஆகும்.

மேலும், டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இளம் வயதில் (19) சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானின் அகமது ஷெஸாத் (Ahmed Shehzad) 22 வயதில் சதம் அடித்ததே சாதனையை இருந்தது.

Yuvraj Samra

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *