அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த பதும் நிசங்கா

1 Min Read

நேற்றைய போட்டியில், சதமடித்த பதும் நிசங்கா அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை அபார வெற்றி

2026 T20 உலக கிண்ணத்தின் நேற்றைய லீக் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பல்லேகேலேவில் மோதியது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த பதும் நிசங்கா | Pathum Nissanka 1St Player Century Vs Aus In T20Wc

முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 181 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

182 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த பதும் நிசங்கா | Pathum Nissanka 1St Player Century Vs Aus In T20Wc

T20 உலக கிண்ணத்தில் இதுவே ஒரு அணியின் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அதிகபட்ச வெற்றிகரமான சேசிங் ஆகும்.

மேலும், டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு அதிகபட்ச வெற்றிகரமான சேசிங் ஆகும்.

பதும் நிசங்கா சாதனை

தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா, 52 பந்துகளில் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இந்த சதம் மூலம், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக T20 உலக கிண்ணத்தில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை பதும் நிசங்கா படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த பதும் நிசங்கா | Pathum Nissanka 1St Player Century Vs Aus In T20Wc

முன்னதாக 2014 T20 உலக கிண்ணத்தில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் 94 ஓட்டங்கள் அடித்ததே அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அதிகபட்ச ஓட்டமாக இருந்தது.

மேலும், டி20 உலகக்கிண்ணத்தில் சதமடித்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பதும் நிசங்கா பெற்றுள்ளார். முன்னதாக 2010 டி20 உலகக்கிண்ணத்தில் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்தனே ஜிம்பாப்வேக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்தார்.

மேலும், இது T20 போட்டிகளில் இலங்கை வீரரின் 2வது அதிவேக சதம் ஆகும். ஏற்கனவே கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில், பதும் நிசங்கா 52 பந்துகளில் சதமடித்திருந்தார்.

நியூசிலாந்திற்கு எதிராக 44 பந்துகளில் சதம் அடித்து இலங்கை வீரர் குசல் பெரேரா, முதலிடத்தில் உள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *